நடிகை பூஜா ஹெக்டே, ரெட்ரோ படம் குறித்து பேசி உள்ளார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. அந்த வகையில் இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர், முகமூடி, பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். காதல் கலந்த கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ஏற்படும் 2025 மே 1 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
“I play a very different role in #Retro & that’s something I love about South🫶. I got cast in Retro, because Karthiksubbaraj liked the emotional scenes of me in #RadheShyam✨. So he thought that he could use me in film like this🫰❤️”
– #PoojaHegdepic.twitter.com/bizcL8RRd3— AmuthaBharathi (@CinemaWithAB) February 4, 2025
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, ரெட்ரோ படம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, “நான் ரெட்ரோ படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனென்றால் கார்த்திக் சுப்பராஜ், நான் நடித்த ராதே ஷ்யாம் படத்தில் என்னுடைய உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்து விரும்பினார். அதனால் என்னை அவருடைய படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தார்” என்று கூறியுள்ளார்.