spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை ராதிகாவின் தாய் வயது மூப்பு காரணமாக காலமானார்…

நடிகை ராதிகாவின் தாய் வயது மூப்பு காரணமாக காலமானார்…

-

- Advertisement -

மறைந்த நடிகர் எம்ஆர் ராதாவின் மனைவியும், மூத்த நடிகை ராதிகாவின் தாயுமான கீதா ராதா 86வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.நடிகை ராதிகாவின் தாய் வயது மூப்பு காரணமாக காலமானார்…மறைந்த நடிகர் எம்ஆர் ராதாவின் மனைவியும், மூத்த நடிகை ராதிகாவின் தாயுமான கீதா ராதா 86வது வயதில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். இன்று மாலை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ள நிலையில் அவரின் உடல் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வருகை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

we-r-hiring

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தி ராதிகா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் உடன் வந்தனர். முன்னதாக முதலமைச்சரின் சகோதரி செவ்வி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் பாஜக சட்டமன்ற உறுப்பின வானதி சீனிவாசன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, திரைக்கலைஞர்கள் பிரபு, நாசர், சிவகுமார், பாக்கியராஜ், மீனா, சோபனா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை மறைந்த கீதா ராதாவின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

2026 தேர்தலில் திமுக அரசின் திருட்டுத்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அன்புமணி சாடல்

MUST READ