Homeசெய்திகள்சினிமாஅஜித்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்... பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!

அஜித்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!

-

நடிகர் அஜித் துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு பல்வேறு நாடுகளுக்கு பைக்கில் டூர் சென்றிருந்தார். மேலும் பைக் தொடர்பான நிறுவனம் ஒன்றை நிறுவி அதனையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த புதிய படம் நிறுத்தப்பட்டு அஜித்தின் அடுத்த அடுத்த படமான விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் மகிழ் திருமேனி பெற்றார். சமீபகாலமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அஜித்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்... பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படம்!அதன்படி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது அஜித்தை இயக்க இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திரிஷா இல்லனா நயன்தாரா படம் வெற்றி படமாக அமைந்தாலும் அதனை தொடர்ந்து வந்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா போன்ற படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தன. ஆனால் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. டைம் டிராவல் கேங்ஸ்டர் கதையாக உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஏற்கனவே நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போதே அஜித், ஆதிக் ரவிச்சந்திரனை ஊக்கப்படுத்தியும் பாராட்டியும் உள்ளார். தற்போது ஆதிக் – அஜித் இருவரும் இணைய உள்ள புதிய படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இப்படத்திற்கு தெலுங்கில் பெரிய அளவிலான ப்ரமோஷன் மற்றும் மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ