இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ஏகே 64 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வெகு விமர்சையாக கொண்டாடி தீர்த்தனர். அந்த அளவிற்கு படம் முழுக்க அஜித்தின் பழைய பட ரெபரன்ஸ், ஆக்சன் காட்சிகள், விண்டேஜ் பாடல்கள் ஆகியவை ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக அமைந்திருந்தது. மேலும் இந்த படத்தில் அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று ஹின்ட் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், அனிருத் இதற்கு இசையமைக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் மோகன்லால், ஸ்ரீலீலா, சுவாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இது தவிர இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் தொடங்கும் என ஏற்கனவே தகவல் கசிந்தது. தற்போது இது குறித்த கூடுதல் தகவலை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் பகிர்ந்துள்ளார். அதாவது ‘ஏகே 64’ படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.