நடிகர் ஹரிஷ் கல்யாண், STR 49 குறித்து பேசி உள்ளார்.
ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் நடிகர்களில் முக்கியமான நடிகராவார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. அதைத்தொடர்ந்து இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டீசல்’ திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ஹரிஷ் கல்யாண், STR 49 படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நானும் STR 49 படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே வெற்றிமாறன் சார் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை காட்டினார். அது மிகவும் நன்றாக வந்திருக்கிறது. அதை விரைவில் ரிலீஸ் செய்யப்போகிறார்கள். முதன்முறை வெற்றிமாறன் – சிம்பு இருவரும் இணைவது பெரியதாக வரும் என்று நினைக்கிறேன். வடசென்னை 2 என்பது அதன் தலைப்பு இல்லை. ஆனால் அது அந்த யுனிவர்ஸிலிருந்து உருவாகும் என ஏற்கனவே வெற்றி சார் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் – சிம்பு இணைய உள்ள STR 49 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. வெற்றிமாறன் நிச்சயம் சிம்புவை வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் புதிய ப்ரோமோவை படக்குழு வெளியிட இருக்கும் நிலையில் அதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.