இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மகனாக கார்த்திகேயா தேவ் நடிக்க, அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சுனில், பிரபு, பிரசன்னா, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசர், பாடல்கள், ட்ரெய்லர், என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படம் கொரியன் படத்தின் ரீமேக் என கூறி வருகிறார்கள். இது குறித்து பேசிய ஆதிக் ரவிச்சந்திரன், “இது ஒரு நேரடியான அஜித் சார் படம். அவருடைய முந்தைய பட வசனங்களுக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மேலும் இது ‘தி கேங்ஸ்டர், தி காப, தி டெவில்’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -