spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா3 மாதங்களில் அடுத்தடுத்து மறையும் நடிகைகள்... மரணத்தில் மர்மம்...

3 மாதங்களில் அடுத்தடுத்து மறையும் நடிகைகள்… மரணத்தில் மர்மம்…

-

- Advertisement -
ஹாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்து நடிககைகள் இறந்து வரும் நிலையில், மற்றொரு நடிகை சோபியா லியோன் என்பவரும் இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

25 வயதாகும் சோபியா, அமெரிக்க திரையுலகில் நடித்து வருகிறார். மேலும், இவர் ஆபாச பட நடிகையும் கூட. ஆபாச திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் அதில் நடிப்பது என்பது சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்று பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்ககளுக்கு ஈடாக பெரும் புகழும், வருமானமும் பெற்றுக் கொண்டிருந்தவர் சோபியா. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

we-r-hiring
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது மறைவுக்கு ரசிகர்களும் திரை உலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அண்மைக் காலமாக ஆபாச நடிகைகளின் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்து பலர் மர்மமான முறையில் இறந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, பிரபல ஹாலிவுட் நடிகை காக்னி லின் கார்டர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹாலிவுட்டில் இவர் பிரபல நடிகையாகவும் வலம் வந்திருக்கிறார். ஆபாச திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காக்னி, திடீரென அதிலிருந்து விலகி திரைப்படங்கலில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். ஆனால் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், அவர் ஆபாச துறையில் கால் பதித்தார். பின்னர், இதன்காரணமாக மன உளைச்சலுக்கும், கடுமையான மன அழுத்ததிற்கும் காக்னி ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு நடிகைகளின் மரணத்திற்கு பின்னால் அதிகப்படியாக போதைப்பொருள் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம் என விசாரணையும் நடைபெற்று வருகிறது.

MUST READ