Homeசெய்திகள்சினிமாபாரதிராஜா & இளையராஜா🔥... 31 வருடங்களுக்குப் பிறகு இணையும் அசத்தல் கூட்டணி!

பாரதிராஜா & இளையராஜா🔥… 31 வருடங்களுக்குப் பிறகு இணையும் அசத்தல் கூட்டணி!

-

- Advertisement -

31 வருடங்களுக்கு பிறகு பாரதிராஜா மற்றும் இளையராஜா கூட்டணி இணைந்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தமிழில் பல கிராமத்து புற கதைக்களங்களில் கல்ட் கிளாசிக் திரைப்படங்கள் கொடுத்த மிக முக்கியமான இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறார் அவர்.

பாரதிராஜாவின் படங்களுக்கு இளையராஜாவின் இசை முதுகெலும்பாக அமைந்தது. இருவரும் இணைந்து தமிழ் சினிமாவின் பொக்கிஷமான பல படங்களை கொடுத்துள்ளனர்.

16 வயதினிலே படத்தின் மூலம் தொடங்கிய இந்தக் கூட்டணி அதையடுத்து கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், கடலோர கவிதைகள், கேப்டன் மகள் வரை தொடர்ந்தது. அதையடுத்து கிழக்கு சீமையிலே படத்தில் இளையராஜா உடனான கூட்டணியை முறித்து  ஏஆர் ரகுமானுடன் இணைந்தார் பாரதிராஜா.

இந்நிலையில் 31 வருடங்களுக்கு பிறகு இளையராஜாவுடன் பாரதிராஜா மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க பிரபலமான மாடர்ன் லவ் சீரிஸ் தமிழிலும் வரவிருக்கிறது. தமிழில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார், அக்ஷய சுந்தர் மற்றும் தியாகராஜன் குமரராஜா ஆகியோர் இணைந்து புதிய அந்தாலஜி படத்தை இயக்குகின்றனர்.

இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன் மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் இந்த அந்த அந்தாலஜி படத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் இசையமைக்க இருக்கின்றனர்.

இதில் பறவை கூட்டில் வாழும் மான்கள் என்ற பகுதியை பாரதிராஜா இயக்குக்கிறார். இந்தப் பாகத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸ் மே 18ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருக்கிறது.

MUST READ