spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி'.... செப்டம்பரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’…. செப்டம்பரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

-

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62 வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி'.... செப்டம்பரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு! இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், குட் பேட் அக்லி எனும் திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டு முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. பின்னர் மீண்டும் ஐதராபாத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த படப்பிடிப்பு நிறையவடைந்து விடும் என்று சொல்லப்படுகிறது. அடுத்ததாக செப்டம்பர் மாதத்தில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி'.... செப்டம்பரில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!அனேகமாக ஸ்பெயின் நாட்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்து வருகிறார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ