spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇதெல்லாம் ஓல்டு டெக்னிக்....மோடியை சுட்டி காட்டினாரா பிரகாஷ்ராஜ்?.... வைரலாகும் ட்வீட்!

இதெல்லாம் ஓல்டு டெக்னிக்….மோடியை சுட்டி காட்டினாரா பிரகாஷ்ராஜ்?…. வைரலாகும் ட்வீட்!

-

- Advertisement -

நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகராகவர். வில்லனாக நடித்தாலும் தந்தையாக நடித்தாலும் அண்ணனாக நடித்தாலும் கதாபாத்திரத்தை நியாயப்படுத்துமாறு நடிக்க கூடியவர். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் இவருடைய நடிப்பு வியக்கத்தக்க வகையில் இருக்கும். அவ்வப்போது இவர் சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துக்களையும் பகிர்ந்து ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்.இதெல்லாம் ஓல்டு டெக்னிக்....மோடியை சுட்டி காட்டினாரா பிரகாஷ்ராஜ்?.... வைரலாகும் ட்வீட்! இந்நிலையில் இவர் எக்ஸ் தளத்தில் “பனாதி” எனும் வார்த்தையால் குறிப்பிட்டு பதிவிட்ட ட்வீட் பேசு பொருளாகியுள்ளது. இவர் பிரபல நகைக்கடை நிறுவனமான பிரணவ் ஜுவல்லரி விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பிரணவ் ஜுவல்லரி 100 கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடியில் பிரகாஷ்ராஜுக்கும் பங்கு இருக்கிறது என கூறி அமலாக்கத்துறை நடிகர் பிரகாஷ் ராஜேயும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ்ராஜ் யாரையும் குறிப்பிடாமல் பொதுவாகவே ” அன்புள்ள பனாதி இதெல்லாம் பழங்காலத்து டெக்னிக், புதிதாக வேறு ஏதேனும் முயற்சி செய்யுங்கள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரகாஷ்ராஜ் மீதான இந்த விசாரணை அரசியல் ரீதியாக அவரை பயமுறுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது போல் அவர் கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் அப்போது பிரதமர் மோடியை சுட்டிக்காட்டியும், காங்கிரசுக்கு ஆதரவாகவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ