Homeசெய்திகள்சினிமாஅல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டீசர் ரிலீஸ் எப்போது?

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2’ டீசர் ரிலீஸ் எப்போது?

-

புஷ்பா 2 படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் அல வைகுந்தபுரமுலு போன்ற கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டீசர் ரிலீஸ் எப்போது?அதே சமயம் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமாரி இயக்கத்தில் புஷ்பா தி ரைஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, பகத் பாசில், சுனில் என பலரும் நடித்திருந்தனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அல்லு அர்ஜுன் இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார். இந்த படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' டீசர் ரிலீஸ் எப்போது?புஷ்பா தி ரூல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டிலேயே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ