spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அமரன்' படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!

‘அமரன்’ படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!

-

- Advertisement -

அமரன் படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார்.'அமரன்' படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு! பொதுவாகவே இவருடைய படங்களும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். அந்த வகையில் காமெடி கலந்த கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் தற்போது இவர் நடித்துள்ள அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம், முந்தைய படங்களின் கதாபாத்திரங்களைப் போல் இல்லாமல் முற்றிலும் வேறு மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும். அந்த வகையில் அமரன் திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் எனவும் சிவகார்த்திகேயனை இந்த படம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். 'அமரன்' படத்தின் ட்ரெய்லர் அறிவிப்பு வந்தாச்சு!கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி நடித்திருக்கிறார். வீர மரணமடைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் அமரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை (அக்டோபர் 23) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ