- Advertisement -
பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் நேரில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் ஜாம்பவானாக வலம் வரும் மகேந்திர சிங் தோனி, அண்மையில் திரைப்பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து எல்.ஜி.எம். படத்தை தயாரித்திருந்தனர். இப்படத்தில் ஹரிஸ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து பட தயாரிப்பிலும் தோனி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, புது ஹேர்டைலுடன் தோனி வலம் வரும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வந்தன.

