Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தில் இணைந்தது மற்றுமொரு நடிகை இவர் தான்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘தளபதி 69’ படத்தில் இணைந்தது மற்றுமொரு நடிகை இவர் தான்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

தளபதி 69 படத்தில் மற்றுமொரு பிரபலம் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.'தளபதி 69' படத்தில் இணைந்தது மற்றுமொரு நடிகை இவர் தான்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் அடுத்ததாக தனது 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 69 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ஹெச். வினோத் இயக்க அனிருத் இதற்கு இசையமைக்க இருக்கிறார். கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. அரசியல் தொடர்பான கதைக்களத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. நாளை (அக்டோபர் 4) இந்த படத்தின் பூஜை நடைபெற இருப்பதாகவும் நாளை மறுநாள் (அக்டோபர் 5) இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.'தளபதி 69' படத்தில் இணைந்தது மற்றுமொரு நடிகை இவர் தான்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மேலும் தளபதி 69 படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் விபரங்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 'தளபதி 69' படத்தில் இணைந்தது மற்றுமொரு நடிகை இவர் தான்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அடுத்ததாக நடிகை பிரியாமணி இந்த படத்தில் இணைந்துள்ளார் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த படத்தில் பிரியாமணியின் கதாபாத்திரம் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்து தகவல் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ