Homeசெய்திகள்சினிமாஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்'..... டீசர் ரிலீஸ் எப்போது?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’….. டீசர் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்'..... டீசர் ரிலீஸ் எப்போது?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தீனா, ரமணா, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் ஏஆர். முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ்,காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பை ஏற்கனவே வெளியான நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் 'சிக்கந்தர்'..... டீசர் ரிலீஸ் எப்போது?அதே சமயம் இந்த படமானது 2025 ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி சல்மான் கானின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ