ஆஸ்கர் வென்ற முதல் தமிழர், அன்று முதல் இன்று வரை ஓயாது வீசும் இசைப்புயல், தமிழ் மக்களின் தன்னிகரில்லாத சொத்து, உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னத கலைஞன் ஏ.ஆர். ரகுமானின் 57வது பிறந்தநாள் இன்று. இந்தியா முழுவதும் உள்ள ஏ.ஆர். ரகுமானின் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 90ஸ் கிட்ஸ்க்கு மாடர்ன் இசையை ஊட்டி வளர்த்த பெருமையும் இவரைத்தான் சாரும். கிராமத்து பின்னணியில் உருவாகும் படமாக இருந்தாலும், நகரத்து பின்னணி கதையாக இருந்தாலும் இவருடைய இசை ஒரு தனித்துவமாக நின்று பேசும். அடுத்ததாக இவரது இசையில் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ள அயலான், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்
லால் சலாம், கமல் நடிக்கும் தக் லைஃப் போன்ற படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில் ஏ ஆர் ரகுமானின் பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கு சினிமாவில் இருந்து ஒரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. ராம்சரண் நடிக்கும் 16வது படத்துக்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்க உள்ளார். புஜ்ஜி பாபு சனா இயக்கும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்திய அளவில் இப்படத்தில் இசை சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஏ ஆர் ரகுமானை இசையமைப்பாளராக தேர்வு செய்துள்ளனர் படக் குழுவினர். இப்படத்தினை விருத்தி சினிமாஸ், சுகுமார் ரைட்டிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.
- Advertisement -