அர்ஜூன் தாஸ் – காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் போர்… முதல் தோற்றம் ரிலீஸ்…
- Advertisement -

தமிழ் சினிமாவில் அர்ஜூனின் தாஸின் குரலுக்கு என்றே தனி ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பு, தோற்றம் இவற்றை தாண்டி அவரது குரலுக்கு இங்கு தனிஇடம் உண்டு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிக்கு அறிமுகமானவர் அர்ஜூன் தாஸ். வில்லனாக நடித்த அவர், தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்திருந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

கதாநாயகனாக அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவர் நடித்த அநீதி படமும் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சாந்தகுமார் இயக்கும் புதிய படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்து முடித்துள்ளார். இபப்டத்திற்கு ரசவாதி என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் தான்யா ஹோப் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், அர்ஜூன் தாஸ் மற்றும் பிரபல மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் திரைப்படம் போர். இப்படத்தை டேவிட் பட இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்குகிறார். தமிழில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராமை வைத்தும் இந்தியில் ஹர்ஸ்வர்தன் ரனே, ஈஹான் பட்டை வைத்தும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்திற்கு இந்தியில் டங்கே என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.