Homeசெய்திகள்சினிமாஅருண் விஜய், ஏ.எல். விஜய் கூட்டணியின் 'மிஷன் சாப்டர் 1'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?

அருண் விஜய், ஏ.எல். விஜய் கூட்டணியின் ‘மிஷன் சாப்டர் 1’…. ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

அருண் விஜய் ஏ.எல். விஜய் கூட்டணியின் 'மிஷன் சாப்டர் 1'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் சாப்டர் 1- அச்சம் என்பது இல்லையே படமானது கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். இந்த படத்தில் அருண் விஜய், நிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்திருந்தார். அருண் விஜய் ஏ.எல். விஜய் கூட்டணியின் 'மிஷன் சாப்டர் 1'.... ஓடிடி ரிலீஸ் எப்போது?ஆக்சன் திரில்லர் கதை களத்தில் வெளியான இப்படம் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படத்திற்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பினால் கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு காட்சிகள் அதிகரிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மிஷன் படத்துடன் வெளியான கேப்டன் மில்லர், அயலான், குண்டூர் காரம் உள்ளிட்ட படங்கள் இன்று பிப்ரவரி 9 ஓடிடியில் வெளியாகின்றன. ஆனாலும் மிஷன் திரைப்படம் போட்டியே இல்லாமல் ஒரு வாரம் கழித்து ஓடிடியில் வெளியாகிறது.

MUST READ