Homeசெய்திகள்சினிமாஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய ஸ்பை திரில்லர்!

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய ஸ்பை திரில்லர்!

-

- Advertisement -

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

‘எஃப்ஐஆர்’ படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யாவும் கௌதம் கார்த்திக்கும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இன்று மே தின ஸ்பெஷலாக படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 

இந்தப் படத்திற்கு ‘மிஸ்டர். எக்ஸ்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஸ்பை ஆக்ஷன் திரில்லராக இருக்கும் என்று தெரிவிக்கிறது. ‘கனா’ படத்திற்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தன்வீர் மிர் மற்றும் பிரசன்னா ஜிகே முறையே ஒளிப்பதிவு மற்றும் எடிட்டராகவும் பணிபுரிகின்றனர்.

“நேரம் வரும்போது ஒரு ஹீரோ எழுந்து கர்ஜிப்பான்” என்ற டேக் லைன் மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. மனு ஆனந்த் ஏற்கனவே தனது முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். தற்போது இந்தப் படத்திலும் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.

MUST READ