spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ'.... ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

அதர்வா நடிக்கும் ‘டிஎன்ஏ’…. ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

அதர்வா நடிக்கும் டிஎன்ஏ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ'.... ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் அதர்வா, தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர இவர், இதயம் முரளி படத்தையும் கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர், ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் டிஎன்ஏ எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். மேலும் பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க பார்த்திபன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் இசை அமைத்திருக்கின்றனர்.அதர்வா நடிக்கும் 'டிஎன்ஏ'.... ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு! ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து போஸ்டர்கள், டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று (மே 7) நடிகர் அதர்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இந்த படமானது 2025 ஜூன் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ