Homeசெய்திகள்சினிமாபாலாவின் 'வணங்கான்' படப்பிடிப்பு நிறைவு..... அறிவித்த படக்குழு!

பாலாவின் ‘வணங்கான்’ படப்பிடிப்பு நிறைவு….. அறிவித்த படக்குழு!

-

பிரபல இயக்குனர் பாலா சேது படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை பதிவு செய்தவர். இவர் தன்னுடைய படங்களில் தனி ஸ்டைலை பயன்படுத்துவார். பாலாவின் 'வணங்கான்' படப்பிடிப்பு நிறைவு..... அறிவித்த படக்குழு!அதன்படி இவருடைய படங்களில் அன்பு என்பது மைய கருவாக இருக்கும். அதேபோல வன்முறை காட்சிகளும் இடம் பெற்றிருக்கும். அதேசமயம் இவர் விக்ரம், சூர்யா போன்ற நடிகர்களை வேறொரு பரிமாணத்தில் காட்டி அந்த நடிகர்களை தன்னுடைய படங்களின் மூலம் வேறொரு கட்டத்திற்கு கொண்டு சென்றார் இந்நிலையில் பாலா, அடுத்ததாக அருண் விஜயை இயக்கி வருகிறார். இவர்களின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு வணங்கான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாலாவின் 'வணங்கான்' படப்பிடிப்பு நிறைவு..... அறிவித்த படக்குழு!இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகவே இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் ரிலீஸ் தெரியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ