Homeசெய்திகள்சினிமாபரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்.......... ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

பரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்………. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

-

பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பரத் வாணி போஜன் கூட்டணியில் கடந்த 2022 ஆம் ஆண்டு மிரள் எனும் திரைப்படம் வெளியானது. படத்தில் இவர்களுடன் இணைந்து கே எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ஓரளவிற்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது பரத், வாணி போஜன் கூட்டணி இரண்டாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இது ‘லவ்’ என்ற மலையாளத் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இந்தப் படத்திற்கும் லவ் – LOVE என்று தான் தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பரத், வாணி போஜன், ஸ்வயம் சித்தா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர் பி பாலா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆர்பி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய ரோனி ரஃபேல் இசையமைத்துள்ளார்.திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் அறிமுகமான வாணி போஜன் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். மேலும் சமீபத்தில் பாயும் ஒளி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ