- Advertisement -
மலையாள திரையுலகில் கடந்த சில மாதங்களாக வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் பெரும் ஹிட் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி மலையாள மொழியில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் திரையரங்குகளில் வெளியானது. சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கேரளாவின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ்நாடு மற்றும் உலகம் முழுக்க வெளியிடப்பட்டது.மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பலரும் திரைப்படத்திற்கும், படக்குழுவுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், நடிகைகள் என பிரபலங்கள் பலரும் படக்குழுவினரை பாராட்டினர். கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவர் குணா படப்பிடிப்பில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தை இயக்கிய சிதம்பரம், அடுத்து, தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதாகவும் கூறப்படுகிறது.




