Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர்' முதல் பாதி 100 நாள்.... இரண்டாம் பாதி 500 நாள்...... ப்ளூ சட்டை மாறன்...

‘ஜெயிலர்’ முதல் பாதி 100 நாள்…. இரண்டாம் பாதி 500 நாள்…… ப்ளூ சட்டை மாறன் கொடுத்த ரிவ்யூ!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மோகன் லால், தமன்னா, சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இப்படம் இன்று உலகம் முழுவதும் சுமார் 7000 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் பலரும் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு கொண்டாடி வருகின்றனர். படத்திற்கு தற்போது வரை பாசிட்டிவான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

இந்நிலையில் பிரபல யூட்யூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜெயிலர் முதல் பாதி 100 நாள்.. இரண்டாம் பாதி 500 நாள்.. என்ன ஒரு என்டர்டெயியினர் படம். இதுதான் 70 ஸ் கிட்ஸ் என்பது” என்று வஞ்சப்புகழ்ச்சியாக விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

ஏற்கனவே சமீபகாலமாக ரஜினியை விமர்சித்து வந்த புது சட்டை மாறனுக்கு நேற்று ரஜினி ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ