இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
Wishing Ilayathalapathi Vijay and the entire cast and crew of #LEO a grand success, awaiting from tomorrow in theatres worldwide. Looking forward to watching it in theatres. Don’t miss it. God Bless. pic.twitter.com/WeU3KYRdH0
— Vishal (@VishalKOfficial) October 18, 2023
நாளை திரைப்படம் வெளியாக இருப்பதால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்பட படக்குழுவினர் அனைத்து பேரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. ரசிகர்கள் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் விஜய் ரசிகர்கள் லியோ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Team #JigarthandaDoubleX wishes team #LEO A Super Block O Blockbuster 🔥💥 #Thalapathy @actorvijay Sir @Dir_Lokesh @anirudhofficial @7screenstudio #LalitKumar @Jagadishbliss and the entire team. #BloodySweetBlockbuster pic.twitter.com/dEdZttKTqS
— karthik subbaraj (@karthiksubbaraj) October 18, 2023
இந்த நிலையில், லியோ திரைப்படம் வெற்றி அடைய வேண்டி திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால், லியோ படம் வெற்றி பெற வாழ்த்துகள் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதேபோல ராகவா லாரன்ஸூம் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Best wishes team #LEO A Super I Pray to Raghavendra Swamy India cinema Biggest Blockbuster 🔥💥 #ThalapathyVijay @actorvijay Nanba 🤗 @Dir_Lokesh @anirudhofficial and the entire team. #BloodySweetBlockbuster pic.twitter.com/B7rMaAmvCq
— Raghava Lawrence (@iamLawrenceoff) October 18, 2023
