Homeசெய்திகள்சினிமாதிரையரங்கமே அதிர போகிறது.... 'மாமன்னன்' படம் குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு!

திரையரங்கமே அதிர போகிறது…. ‘மாமன்னன்’ படம் குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு!

-

- Advertisement -

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை பரியேறும் பெருமாள் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகுள்ள இந்த படம் நாளை வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் அளித்துள்ளது.இந்நிலையில் மாமன்னன் படம் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரி செல்வராஜின் மாமன்னன் ஒரு உணர்வுபூர்வமான படம். மாரி உனக்கு ஒரு பெரிய ஹக். வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் மிகவும் உறுதியான நடிப்பை கொடுத்துள்ளனர். பகத் மற்றும் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளனர். இடைவேளையின் போது திரையரங்கமே அதிர போகிறது. இறுதியாக ஏ ஆர் ரகுமான் அழகாக இசையமைத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ