spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபேய் மாதிரி வருவான்.... இறங்கி செய்வான்.....'ராயன்' படத்தின் டிரைலர் வெளியீடு!

பேய் மாதிரி வருவான்…. இறங்கி செய்வான்…..’ராயன்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.பேய் மாதிரி வருவான்.... இறங்கி செய்வான்.....'ராயன்' படத்தின் டிரைலர் வெளியீடு!

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தனுஷின் ஐம்பதாவது படம் என்பதால் அவரே இயக்கி நடித்திருக்கிறார். இதில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அதேசமயம் நடிகர் தனுஷ் இந்த படத்தில் ரகசிய போலீஸாக நடித்திருக்கிறார் என்று தகவல் வெளியாகி வருகின்றன.பேய் மாதிரி வருவான்.... இறங்கி செய்வான்.....'ராயன்' படத்தின் டிரைலர் வெளியீடு!

we-r-hiring

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படமானது வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றன. மேலும் ஜூலை முதல் வாரத்தில் இதன் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்று முடிந்துள்ளது.

அடுத்ததாக ராயன் திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்களுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். இதன்மூலம் எஸ் ஜே சூர்யா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ட்ரைலரில் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ராயன் திரைப்படம் பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது. இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ