Homeசெய்திகள்சினிமா ”NO NEED” மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா? – சுரேஷ் சந்திரா விளக்கம்

 ”NO NEED” மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா? – சுரேஷ் சந்திரா விளக்கம்

-

- Advertisement -

”NO NEED” என அஜித் கூறியதாக வெளியான தகவலுக்கு அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளாா். ”NO NEED” மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாறா? – சுரேஷ் சந்திரா விளக்கம்

நடிகர் அஜித் குமார் வாக்களித்ததைத் தொடர்ந்து, அவர் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவிய கருத்து தொடர்பாக விளக்கம் வெளியாகியுள்ளது.

we-r-hiring

வாக்களித்த பிறகு, “தமிழகத்தில் மாற்றம் வருமா?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அஜித் “No Need” என பதிலளித்ததாக தகவல்கள் பரவின. இதனால், தற்போதைய ஆட்சியில் மாற்றம் தேவையில்லை என்ற கருத்தை அவர் தெரிவித்ததாக சிலர் பொருள் பெற்று பகிர்ந்தனர்.

ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என அவரது மேலாளர் சுரேஷ் சந்தரா மறுப்பு தெரிவித்துள்ளார். அஜித் எந்தவித அரசியல் கருத்தையும் வெளியிடவில்லை என்றும், அவரது பதில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம், நடிகர் அஜித் அரசியல் தொடர்பான கருத்து தெரிவித்ததாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

”ஜனநாயகன்” படம் கசிவு விவகாரம் – எடிட்டர் முன்ஜாமின் மனு ஒத்திவைப்பு

MUST READ