Homeசெய்திகள்சினிமாராஜூ முருகன் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா... கமிட்டான இளம் நடிகர்...

ராஜூ முருகன் படத்திலிருந்து விலகிய எஸ்.ஜே.சூர்யா… கமிட்டான இளம் நடிகர்…

-

- Advertisement -
ராஜூ முருகன் படத்திலிருந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா விலகிய நிலையில், படத்தில் புதிதாக இளம் நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குக்கூ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு இயக்குநராக தடம் பதித்தவர் இயக்குநர் ராஜூ முருகன். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்தார். இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தன. இதைத் தொடர்ந்து அவர் ஜோக்கர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் ஏகபோக வரவேற்பை பெற்று பல விருதுகளை வென்றது. படத்தில் இவர் பேசிய அரசியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து ஜீவாவை வைத்து ஜிப்ஸி திரைப்படத்தை இயக்கினார்.

இதைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து ஜப்பான் திரைப்படத்தை இயக்கினார். படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் திரைக்கு வந்தது. இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல், தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.

அதன்படி, அப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், இத்திரைப்படத்திலிருந்து எஸ்.ஜே.சூர்யா விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக மாஸ்டர், கைதி படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.

MUST READ