Homeசெய்திகள்சினிமாமனோஜ் பாரதிராஜா இயக்கும் புதிய படத்தில் வில்லனாகும் இயக்குனர் சுசீந்திரன்!

மனோஜ் பாரதிராஜா இயக்கும் புதிய படத்தில் வில்லனாகும் இயக்குனர் சுசீந்திரன்!

-

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் தற்போது ‘மார்கழி திங்கள்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களான ஷாம் செல்வன் மற்றும் ரக்ஷனா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பாரதிராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிபக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.

மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கிய நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திடீரென மின்னல் தாக்கி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

அதைத்தொடர்ந்து, தற்போது பழனி பகுதிகளில் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் கூடுதல் தகவலாக இயக்குனர் சுசீந்திரன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிக்கும் படத்திலே அவர் வில்லனாக நடிப்பது படத்தின் மீதான சுவாரசியத்தை அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ