spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக களம் இறங்கும் மனோஜ் பாரதிராஜா… இனிதே தொடங்கிய படப்பிடிப்பு!

இயக்குனராக களம் இறங்கும் மனோஜ் பாரதிராஜா… இனிதே தொடங்கிய படப்பிடிப்பு!

-

- Advertisement -

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக களமிறங்க இருக்கிறார். அந்த படத்திற்கு மார்கழி திங்கள் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

ரக்ஷனா மற்றும் ஷாம் செல்வன் இருவரும் இந்த படத்தின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். பாரதிராஜாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மார்கழி திங்கள் படத்தை இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா ப்ரொடக்ஷன் கீழ் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது பூஜையில் பாரதிராஜா சுசீந்திரன் மனோஜ் பாரதிராஜா மற்றும் படத்தின் நடிகர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன

தமிழ் சினிமாவில் நடிகராக சில படங்களில் தோன்றிய மனோஜ் பாரதிராஜா தற்போது தனது அப்பா வழியில் இயக்குனராக களம் இறங்குகிறார். அவருக்கு திரை துறையை சார்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ