Homeசெய்திகள்சினிமாதளபதி 69 படத்திற்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்... ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?

தளபதி 69 படத்திற்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்… ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?

-

விஜய் கால்ஷீட்டுக்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்... ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆயுத பூஜை ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம் லியோ. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் 620 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்ததாக தளபதியின் 68 வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் என செய்திகள் ஏற்கனவே கசிந்தன. இந்நிலையில் விஜயின் 69 வது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் லிஸ்டில் ஏற்கனவே அட்லி, வெற்றிமாறன் ஆகியோர் இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் தான் தளபதி69 ஐ இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்காக புதிய தகவல் ஒன்றும் தற்போது கசிந்துள்ளது. விஜய் கால்ஷீட்டுக்காக வரிசை கட்டி நிற்கும் இயக்குனர்கள்... ஷாக் கொடுக்கப் போகிறாரா விஜய்?2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதாலும், 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதால் அதற்கான அரசியல் பணிகளைச் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. எனவே, தளபதி 68 படத்தை முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் தேர்தல் பணியில் கவனம் செலுத்த உள்ளாராம் விஜய். இதனால் இந்த இரண்டு ஆண்டுகளில் விஜய் எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் 2026 தேர்தலுக்குப் பின்தான் அடுத்ததாக எந்த இயக்குனருடன் விஜய் இணைய உள்ளார் என்பது பற்றியும் தெரியவரும் என்றும் செய்திகள் தீயாய் பரவி வருகின்றன.

MUST READ