Homeசெய்திகள்சினிமாஇன்வெஸ்டிகேஷன் திரில்லரில் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'.... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’…. இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

-

- Advertisement -

டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்'.... இணையத்தில் வைரலாகும் ட்ரெய்லர்!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனன் தனது தாய் மொழியான மலையாளத்தில் புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி தானே தயாரித்து நடித்திருக்கிறார். இந்த படத்தில் மம்மூட்டியுடன் இணைந்து சுஷ்மிதா பட், கோகுல் சுரேஷ், விஜி வெங்கடேஷ், வினித், விஜய் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க விஷ்ணு ஆர் தேவ் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து படத்திலிருந்து டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இந்த படமானது வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது இந்த படமானது இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருப்பது போல் தெரிகிறது. மேலும் இந்த ட்ரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ