தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் படமானது 2024 செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் செய்திகள் பரவி வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஆக்சன் காட்சிகள் நிறைந்த படமாக இந்த படம் உருவாகி வரம் இந்த படம் சிவகார்த்திகேயனின் 23வது படம் ஆகும்.
இவ்வாறு தொடர்ந்து பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனது 24 வது படத்தில் நடிக்க இருக்கிறார். SK24 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். டான் திரைப்படம் ரசிகர்களின் ரசிகர்களின் பேராதரவை பெற்று 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்ததாக இந்த கூட்டணி இணைய இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகமாகியுள்ளது. இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது SK24 படம் குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறதாம். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறாராம். இந்த படத்தின் ப்ரீ புரோடக்சன் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.