நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் K.E. ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இதில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 3D தொழில்நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படமானது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதேசமயம் இந்த படம் பத்துக்கும் மேலான மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி கவனம் பெற்றது. பின்னர் டீசரும் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா, கங்குவா படத்தை 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளார். VFX மற்றும் 3D ஆகிய பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். நாங்கள் இந்த படத்தை 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடவும் பத்துக்கும் அதிகமான மொழிகளில் ஓடிடியில் வெளியிடவும் முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். எனவே படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -