நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அதைத் தொடர்ந்து ஹீரோவாகவும் களமிறங்கி ஒரு கை பார்த்தார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இவருடைய படங்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கைகளை எதிர்க்கும்படியானதாகவும் கடவுள் மறுப்பு தொடர்பான வசனங்களும் இடம் பெற்றிருக்கும்.
அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சத்யராஜ், தந்தை பெரியாரின் பயோபிக் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கனக்கச்சிதமாக பெரியாராகவே நடித்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார். பல மேடைகளில் இவர் பெரியார் குறித்து பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக சத்யராஜ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மோடியாக நடிக்கப் போகிறார் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி பாலிவுட்டில் தயாராக இருக்கும் இந்த படமானது பான் இந்திய அளவில் உருவாகப் போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இது குறித்து சத்யராஜ் தரப்பில் கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மோடி பயோபிக் படத்தில் நடிக்க யாரும் தன்னை கேட்கவில்லை எனவும் இது வெறும் வதந்திகள் எனவும் அப்படி வாய்ப்பு வந்தால் பின்பு இதைப் பற்றி யோசிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார் சத்யராஜ்.
- Advertisement -