இயக்குனர் செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் செல்வராகவன் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே சமயம் இவர் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் வருகின்ற 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘ஆர்யன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் செல்வராகவன். இதற்கிடையில் இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்துடன் 7ஜி ‘ரெயின்போ காலனி 2’ திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அடுத்த பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க சூர்யா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ராம்ஜி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய செல்வராகவன் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
#Selvaraghavan Recent
– Around 50 to 60% of the shooting for both films #MentalManadhil and #7GRainbowColony2 is completed. Both films are scheduled to release next year.
– The two films are very different from each other.pic.twitter.com/8klld6hVYO— Movie Tamil (@_MovieTamil) October 28, 2025

அதன்படி அவர், “மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி 2 ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் கிட்டத்தட்ட 50 முதல் 60% நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடம் இரண்டு படங்களையும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இரண்டு படங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை” என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


