ஏகே 64 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்த நிலையில், இந்த வெற்றிக்குப் பிறகு அடுத்ததாக ரசிகர்கள் அஜித்தின் 64வது படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப்போகிறார் என பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அப்டேட் கொடுத்திருந்தார். அதன்படி ஏகே 64 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த புதிய படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். அடுத்தது இந்த படத்தில் மோகன்லால், ஸ்ரீலீலா சுவாசிகா ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் தகவல் கசிந்தது. மேலும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. தற்போது இது குறித்த கூடுதல் தகவல் என்னவென்றால் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதை தொடர்ந்து நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


