நடிகை நயன்தாராவின் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் ‘மண்ணாங்கட்டி’, ‘ராக்காயி’, ‘ஹாய்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மலையாளத்தில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’, ‘பேட்ரியாட்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் யாஷ் நடிப்பில் உருவாகும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் யாஷின் சகோதரியாக நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிரஞ்சீவியுடன் இணைந்து ‘மன சங்கர வர பிரசாத் கரு’ என்ற படத்தில் நடிக்கிறார். இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். அதன்படி இவர், தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை கோபிசந்த் மலினேனி இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே நடிகை நயன்தாரா, நந்தமுரி பாலகிருஷ்ணா உடன் இணைந்து ஸ்ரீ ராமராஜ்யம் திரைப்படத்தில் சீதையாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகை நயன்தாரா பல விருதுகளையும் வென்றுள்ளார். இது தவிர சிம்ஹா, ஜெய்சிம்ஹா ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


