spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் திருமணம்.... விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!

விரைவில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குனரின் திருமணம்…. விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!

-

- Advertisement -

பிரபல தயாரிப்பாளர் டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனருக்கு திருமண பரிசு வழங்கியுள்ளார்.விரைவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் திருமணம்.... விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!

கடந்த மே மாதம் 1ஆம் தேதி சசிகுமார், சிம்ரன், மிதுன், கமலேஷ், ரமேஷ் திலக், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரின் நடிப்பில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களை கடந்து எப்படி தங்களின் வாழ்க்கையை தொடங்குகிறது என்பதை மையமாக வைத்து எமோஷனல் கலந்த கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விரைவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் திருமணம்.... விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்படத்தின் இயக்குனர் அபிஷன், சௌந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் ஆகியோர் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இதில் அபிஷனுக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் அபிஷன் ஜீவிந்துக்கு, டூரிஸ்ட் ஃபேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ், பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை திருமண பரிசாக வழங்கியுள்ளார்.விரைவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குனரின் திருமணம்.... விலையுயர்ந்த பரிசளித்த தயாரிப்பாளர்!

we-r-hiring

அதாவது அபிஷன் ஜீவிந்த் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தனது காதலி அகிலாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார். ஏற்கனவே இயக்குனர் அபிஷன், டூரிஸ்ட் ஃபேமிலி படம் தொடர்பான நிகழ்ச்சியின் போது மேடையில் தனது காதலி அகிலாவிற்கு திருமண ப்ரோபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ