கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படமானது கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் தாமதமான இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பாக முழுவதும் நிறைவடைந்தது. அதே சமயம் இந்த படமானது ஜூன் மாதத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனால் படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும் இன்னும் சில நாட்களில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகும் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாக நம்ப தகுந்த இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#KamalHaasan arrives in #Mumbai for #Indian2 movie promotions#Ulaganayagan #Bharateeyudu2 #Kollywood #Tollywood #Tupaki pic.twitter.com/k6e7FPkDob
— Tupaki (@tupaki_official) May 18, 2024
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி பெங்களூரில் இன்று நடைபெறும் CSK vs RCB IPL கிரிக்கெட் போட்டியில் இயக்குனர் சங்கர் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்று இந்தியன் 2 படத்தினை ப்ரோமோஷன் செய்ய உள்ளனர். இதற்காக தற்போது நடிகர் கமல்ஹாசன் மும்பை சென்றடைந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.