Homeசெய்திகள்சினிமாதுல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோத்தா' ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோத்தா’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

-

கிங் ஆஃப் கோத்தா படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பான் இந்தியா நடிகரான துல்கர் சல்மான் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அபிலாஷ் ஜோசி இயக்கத்தில் கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரித்திகா சிங், பிரசன்னா, அனிகா சுரேந்திரன் ,சபீர் கல்லாரக்கல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் கிலாடி வி ஆபிரகாம் இணைந்து படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் படத்தின் டீசரும் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் டிரைலர் இந்த வாரம் வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ