spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகல்லாட்டக்காரன்...... கிங் ஆஃப் கோத்தா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

கல்லாட்டக்காரன்…… கிங் ஆஃப் கோத்தா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

-

- Advertisement -

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

துல்கர் சல்மான் சீதாராமம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கிங் ஆஃப் கோத்தா திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். அபிலாஷ் ஜோசி இந்த படத்தை இயக்கியுள்ளார். துல்கர் சல்மான் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ரித்திகா சிங் பிரசன்னா, அனிகா சுரேந்திரன், சபீர் கல்லாரக்கல் மற்றும் பலர் நடித்துள்ளனர். வேஃப்பரர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறது.

we-r-hiring

இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் கிலாடி வி ஆபிரகாம் இணைந்து இசை அமைத்துள்ளனர். இந்த படம் மலையாள மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு கிங் ஆப் கோத்தா படத்தின் கல்லாட்டக்காரன் எனும் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலில் அப்துல் கலாம் சல்மான் மாஸான தோற்றத்தில் காணப்படுகிறார். பாடலில் இவருடன் இணைந்து ரித்திகா சிங் நடனம் ஆடுகிறார்.
இந்தப் பாடலை ஜேக்ஸ் பிஜாய், பென்னி தயால், ஹரிதா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். மணி அமுதவன் பாடலை எழுதியுள்ளார்.

MUST READ