Homeசெய்திகள்சினிமாராம்சரணுக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்.....என்ன காரணம்?

ராம்சரணுக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்…..என்ன காரணம்?

-

நடிகர் ராம்சரண், ஆர் ஆர் ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ராம்சரணுக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்.....என்ன காரணம்?இதைத்தொடர்ந்து ராம்சரண், தனது 16ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை உப்பென்னா பட இயக்குனர் புஜ்ஜி பாபு சனா இயக்க இருக்கிறார். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ராம்சரண் விளையாட்டு வீரராக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.ராம்சரணுக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்.....என்ன காரணம்?
கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிலையில் RC16 படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் ஸ்ட்ராங்கான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறதாம். அதற்காக படக்குழுவினர் பிரபல நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் விஜய் சேதுபதி, தனக்கு 20 கோடி ரூபாய் வரை சம்பளமாக வேண்டும் என்று கேட்டாராம். ஆதலால் படக்குழுவினர் சற்று பின்வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி, இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். ஆகவே இந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக வேண்டுமென்றே சம்பளத்தை ஏற்றி கேட்டிருக்கிறார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.ராம்சரணுக்கு வில்லனாகும் வாய்ப்பை இழந்த பிரபல தமிழ் நடிகர்.....என்ன காரணம்? இருப்பினும் ராம்சரணின் RC16 படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இதில் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ராம்சரண், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ