- Advertisement -
பிரபல ஹாலிவுட் நடிகை காக்னி லின் கார்டர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


நடிப்பு, பாடகி, நடனக் கலைஞர், உடற்பயிற்சியாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் காக்னி. ஹாலிவுட்டில் இவர் பிரபல நடிகையாகவும் வலம் வந்திருக்கிறார். ஆபாச திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த காக்னி, திடீரென அதிலிருந்து விலகி திரைப்படங்கலில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். ஆனால் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், அவர் ஆபாச துறையில் கால் பதித்தார். இதன் மூலம் பெரும் வருமானத்தையும் காக்னி ஈட்டினார்.

அதன் மூலம் ஈட்டிய மொத்த பணத்தையும் உடற்பயிற்சி கூடத்தில் முதலீடு செய்து, மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கினார். அக்ரோனில் முதல் உடற்பயிற்சி கூடத்தை அவர் தொடங்கி இருந்தார். தொடக்கத்தில் நல்லபடியாக சென்று கொண்டிருந்த கூடம், பின்னர் தொய்வு அடைந்தது. இதன்காரணமாக மன உளைச்சலுக்கும், கடுமையான மன அழுத்ததிற்கும் காக்னி ஆளாகினார்.



