spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலகம் முழுவதும் வெளியான விஜயின் 'கோட்'.... தியேட்டரில் குத்தாட்டம் போட்ட பாட்டி!

உலகம் முழுவதும் வெளியான விஜயின் ‘கோட்’…. தியேட்டரில் குத்தாட்டம் போட்ட பாட்டி!

-

- Advertisement -

விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு ஒருவித உற்சாகம் தான். அதிலும் இரண்டு விஜய் என்றால் அவ்வளவுதான், ரசிகர்களால் உற்சாகத்தை அடக்கவே முடியாது. அதன்படி நடிகர் விஜய் தளபதியாகவும் இளைய தளபதியாகவும் இரட்டை வேடங்களில் கலக்கியுள்ள திரைப்படம் தான் கோட். உலகம் முழுவதும் வெளியான விஜயின் 'கோட்'.... தியேட்டரில் குத்தாட்டம் போட்ட பாட்டி!இந்த படம் இன்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் படத்தின் திரைக்கதையும், படத்தில் இடம்பெற்றுள்ள கேமியோக்களும் படத்தை சுவாரசியமாக நகர்த்துகிறது. அதிலும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கிளைமாக்ஸ் காட்சி தூள் கிளப்பி உள்ளது. அதுபோல படத்தின் விசில் போடு பாடலும் மட்ட பாடலும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விஜயின் கோட் படத்தை தளபதி திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோட் திரைப்படம் இன்று தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிகளுடன் வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் வெளியான விஜயின் 'கோட்'.... தியேட்டரில் குத்தாட்டம் போட்ட பாட்டி!அதில் கேரள மாநிலம் பாலக்காட்டில் கோட் படத்தை காணவந்த மூதாட்டி ஒருவர் உற்சாகத்தில் இளைஞர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜயின் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட போதிலும் அப்படி போடு பாடலுக்கு மூதாட்டி ஒருவர் குத்தாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

MUST READ