Homeசெய்திகள்சினிமாஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்

ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்

-

- Advertisement -

ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்

ஹரீஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

நடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டீசல், லெட்ஸ் கெட் மேரிடு ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், மேலும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஹரீஷ் கல்யாண் ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு லப்பர் பந்து என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதில் அட்டக்கத்தி தினேஷும் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார்.

லப்பர் பந்து படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக சஞ்சனா நடிக்க உள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளியான வதந்தி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

MUST READ