Homeசெய்திகள்சினிமாவிஜய் சேதுபதி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹரிஷ் கல்யாண்!

விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹரிஷ் கல்யாண்!

-

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண் , விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹரிஷ் கல்யாண்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன், பியார் பிரேமா காதல், ஓ மணப்பெண்ணே போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதேசமயம் ஹரிஷ் கல்யாண் டீசல், லப்பர் பந்து, நூறு கோடி வானவில் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். ஆனால் இந்த படங்கள் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான றெக்க திரைப்படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம் ஹரிஷ் கல்யாண். விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹரிஷ் கல்யாண்!இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இயக்குனர் ரத்தின சிவா, விஜய் சேதுபதியை மசாலா ஹீரோவாக மாற்றியது போல ஹரிஷ் கல்யாணையும் மசாலா ஹீரோவாக மாற்றப் போகிறார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ