spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎம்.எஸ். தோனி தயாரிப்பில் உருவான எல் ஜி எம் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

எம்.எஸ். தோனி தயாரிப்பில் உருவான எல் ஜி எம் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள எல் ஜி எம் (LGM-Let’s Get Married) திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்கி இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நதியாவும் காதலியாக இவானாவும் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கள் அடுத்தடுத்து வெளியானது. அதன் பிறகு இப்படத்தின் டிரைலரை எஸ் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடைய நல வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாடலும் வெளியானது.

we-r-hiring

இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ