spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டிரைலரை வெளியிட்ட எம் எஸ் தோனி!

ஹரிஷ் கல்யாணின் எல்ஜிஎம் படத்தின் டிரைலரை வெளியிட்ட எம் எஸ் தோனி!

-

- Advertisement -

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள எல்ஜிஎம்  (LGM -Let’s Get Married) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் மகேந்திர சிங் தோனி மற்றும் சாக்ஷி சிங் தோனி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்கி இசையமைத்துள்ளார்.

படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நதியா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் ஹரிஷ் கல்யாணத்துக்கு அம்மாவாக நதியாவும் காதலியாக இவானாவும் நடித்துள்ளனர்.இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறுகிறது. அந்த விழாவில் எம் எஸ் தோனி மற்றும் சாட்சி சிங் தோனி எல் ஜி எம் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.

we-r-hiring

இதில், இவ்வானாவிற்கும் ஹரிஷ் கல்யாணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் இவனா திருமணத்திற்குப் பிறகு மாமியாரான நதியாவுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதற்கு நதியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்று ஹரிஷ் கல்யாணிடம் கூறுகிறார். அதற்காக திருமணத்திற்கு முன்பே ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானாவின் குடும்பத்தினர் அனைவரும் ஒரு இன்டர்நேஷனல் ட்ரிப் செல்கின்றனர். அங்கு ஒரு காட்டில் நதியாவும் இவானாவும் தனியாக மாட்டிக் கொள்கின்றனர். ஒரு கும்பல் ஒன்று அவர்களை கடத்தி விடுகிறது. அவர்களை அடைத்து வைத்திருக்கும் வண்டியில் ஒரு புலி ஒன்று இருக்கிறது. இவ்வாறாக இப்படத்தின் ட்ரெய்லர் 2.18 நிமிடங்கள் தொடர்கிறது.

இந்த படத்தின் டிரைலர் ஆனது இப்படம் ஒரு கலகலப்பான படம் என்பதை காட்டுகிறது. ட்ரெய்லர் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

MUST READ